Breaking News

சீனியின் மொத்த விற்பனை விலை குறைப்பு!



சீனியின் மொத்த விற்பனை விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ,சீனிக்கான மொத்த விற்பனை விலை ஒரு கிலோ கிராமுக்கு 20 முதல் 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் இதனை அறிவித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு முதல் இந்த விலைக் குறைப்பு அமுலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாவின் மதிப்பு வலுப்பெற்று வருவதால் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.