Breaking News

பாகிஸ்தானில் வாட்ஸ்அப்பில் மத அவமதிப்பு- வாலிபருக்கு மரண தண்டனை!

 


பாகிஸ்தானின் வடமேற்கு நகரான மர்தானை சேர்ந்த சையது முகமது ஷான் என்பவர் வாட்ஸ்அப் குழுவில் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டார். 

இதுதொடர்பான வழக்கு பெஷாவர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. 

சையது முகமது ஷானின் செல்போனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவர் மத அவமதிப்பு கருத்துக்களை பதிவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.