Breaking News

மண்ணெண்ணெய் விலை குறைப்பு

 


மண்ணெண்ணெய் விலையை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாய் ஆகும்.

அத்துடன் இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 134 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அதன் புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

ஆனால், ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.