காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா 42 படக்குழு!
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யா 42 இந்நிலையில் சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வருகிற 14.03.2023 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மாபெரும் நிகழ்வில் ஒரு பிரமாண்ட திட்டம். காத்திருப்பு முடிந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.