தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவரின் பேருந்து கட்டண திருத்தம் குறித்த அறிவிப்பு!
எதிர்வருகின்ற ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றையதினம் (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் இடம்பெறும் தேர்தல் பேரணிகள் காரணமாக பேருந்து தொழிற்துறைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.