மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏற்றி வரும் 16ஆவது கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டை வந்தடைய உள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹெவகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.