Breaking News

கால் விரல் இடுக்குகளில் வரும் சேற்றுப்புண்... தீர்வு தரும் சித்த மருத்துவம்...

 


'சேற்றுப்புண்' தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் மூலம் வரக்கூடியது. சேற்றுப் புண்ணை சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தி விட்டால் அது மேலும் அதிகமாகி வலியை உண்டாக்கி விடும். 

கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு அதிகமாக இருக்கும். இதனால் நடக்க முடியாத அளவிற்கு துன்பம் ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சேற்றுப்புண் வந்தால் விரைவில் ஆறவே செய்யாது என்பதால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களை கொண்டு ஒரே நாளில் சேற்றுப்புண் பிரச்சனையிலிருந்து நிவாரணம் காண முடியும். ஈரப்பதமான இடங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்வதும், அழுக்கு படிந்த நீரில் காலை வைத்து நடந்து செல்வதும் சேற்றுப்புண் வர காரணமாக அமைகிறது. 

விரல் இடுக்குகளில் இருக்கும் பகுதியில் அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும். இதனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் மற்ற கால் விரல்களுக்கும் பரவி அதிகமாகிவிடும். 

இதனால் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வது நல்லது. இது சேற்றுப்புண் அல்லது 'அத்தலட்ஸ்' புண் என்று அழைக்கப்படும் 'டீனியா பெடிஸ்' என்னும் பூஞ்சை வகை நோய். 

இது வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் மழைக்காலங்களில் செருப்பு இல்லாமல் நடப்பவர்களுக்கு அதிகமாக வரும். கால் விரல் இடுக்குகளில் வெளுத்த நிறமுடைய புண் ஏற்பட்டு அரிப்பு, தினவு அதிகமாக இருக்கும். சொரிந்த பிறகு எரிச்சல் காணப்படும். 

இதற்கான சித்த மருந்துகள்: 

1) பறங்கிப்பட்டை சூரணம் ஒரு கிராம், கந்தக பற்பம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

 2) சேற்றுப் புண் உள்ள பகுதிகளில் அமிர்த மெழுகு, கிளிஞ்சல் மெழுகு, வங்க வெண்ணெய் இவைகளில் ஒன்றைப்பூசி வர வேண்டும். 

3) கடுக்காய், மாசிக்காய், தான்றிக்காய் போன்ற துவர்ப்புள்ள பொடிகளால் புண்ணைக்கழுவி வர வேண்டும். 

4) புண்ணைக் கழுவுவதற்கு புளியந்தளிர் அவித்த நீர், படிகார நீர், வேப்பந்தளிர் அவித்த நீரையும் பயன்படுத்தலாம்.

 5) கால்களை காலை, இரவு வெந்நீரில் கழுவி சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மாலைமலர்