Breaking News

கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய திரைப்படம்.. வெளியான அப்டேட்..

 


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாம் திரைக்கதை, இயக்கம் , பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் தன் தேர்ந்த நடிப்பால் மக்கள் மனதில் நீக்கா இடம் பிடித்துள்ளார். 

இதுமட்டுமல்லாமல் இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்கி வருகிறார். கமல்ஹாசன் இந்த நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசன் பல படங்களை தயாரித்து வருகிறார். 

கடந்த ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இந்த தயாரிப்பு நிறுவனத்தின் 56-வது படத்தின் அப்டேட் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.