Breaking News

போக்குவரத்துக்கு நாளை எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிப்பு!



 போக்குவரத்துக்கு நாளைய தினம்(புதன்கிழமை) எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தனியார் பேருந்துகள் ஆதரவு வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளைய தினம் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.