தெற்காசியாவிலேயே சிறந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்!
தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.