Breaking News

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

 


உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

அன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.