Breaking News

மகன் இயக்கத்தில் நடிக்கும் பாரதிராஜா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

 


இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. 

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை வருகிற 31-ஆம் தேதி பத்து முன்னணி இயக்குனர்கள் வெளியிட உள்ளனர். மனோஜ் பாரதிராஜா - மணிரத்னம்- சுசீந்திரன் பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தான் இயக்குனர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். 

மேலும், இப்படம் அனைவரும் ரசித்து பாராட்டும் வகையில் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் ஜி.வி.பிரகாஷின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கியப்பங்காற்றும் என்றும் மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார். மனோஜ் பாரதிராஜா, இயக்குனர் மணிரத்னத்திடம் 'பம்பாய்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். இதனையொட்டி அவரை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.