Breaking News

தொடர்ந்து சாதனை படைக்கும் 'மாமனிதன்' திரைப்படம்!




இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. 

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 

'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விருதினை பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்காவில் நடைபெற்ற 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.