13வது அரசியலமைப்பை ஒருபோதும் அமுல்படுத்த கூடாது!
13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூன்று மஹாநிகாய தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்தும் கெடுபிடிகள் தொடர்பில் அவர்களினார் எழுதப்பட்ட கடிதம் இன்று (02) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.நாட்டின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளை உருவாக்கும் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஒருபோதும் அமுல்படுத்தவே கூடாது என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.