துருக்கியில் 3வது முறையாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு- பலி எண்ணிக்கை 1400ஆக உயர்வு!
துருக்கியில் தற்போது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பதற்றம் நீடித்துள்ளது. துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக இது பதிவானது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது.
துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கியை தொடர்ந்து பக்கத்து நாடான சிரியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது.
துருக்கியில் நடந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1400ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திருக்கியில் அதிகாலை முதல், அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து தற்போது 6.0 என்ற ரிக்டர் அளவுகோளில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.