Breaking News

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் அறிவிப்பு!

 


நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியர்களும் தமது தனியார் துறை சேவைகளில் இருந்து விலகி நாளை(புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.