உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள்!
மொழி என்பது ஒரு வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தகவல் தொடர்பு அமைப்பாகும். இது மரபுகள் மற்றும் இலக்கண விதிகளைக் கொண்டுள்ளது. இது மனித சமூகங்களால் தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக பயன்படுகிறது.
வழக்கமாக ஒலி சின்னங்களை அடிப்படையாக கொண்டு ஓர் இணைப்புக் கருவியாகவும், கருத்துப் பரிமாற்றக் கருவியாகவும் மொழி காணப்படுகிறது. மற்றும் ஓர் இனத்தின் புற அடையாளமாகவும் காணப்படுகிறது.
உலகில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் தற்பொழுது பேசப்படுகின்றன. இருப்பினும் இவற்றில் ஒரு சில மொழிகளே உலகில் பல மக்களால் பேசப்படுகிறது.
இவ்வாறு ஒரு மொழியினை மக்கள் பேசும் தொகையின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள 10 மொழிகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள்
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள்
1. மான்டரீன் மொழி – (Mandarin Chinese language)
உலகின் முதல் 10 மொழிகளில் மான்டரீன் சைனீஸ் மொழி முதலிடத்தில் உள்ளது. உலகிலேயே அதிகம் பேசப்படும் மொழி இதுவாகும். 39 நாடுகளில் சீனமொழியின் 13 பேச்சுவழக்குகள் பேசப்படுகின்றன.
மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது, 1.3 பில்லியன் மக்கள் சைனீஸ் மொழியினை பேசுகின்றனர். இம்மொழி சீனக் குடியரசு, சிங்கப்பூர், தாய்வான், மக்காவ் மற்றும் ஹாங்காங் போன்ற இடங்களில் அதிகம் பேசப்படுகிறது.
2. ஸ்பானிஷ் மொழி – (Spanish Language)
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இரண்டாவது ஸ்பானிஷ் மொழி காணப்படுகிறது. இது உலக மக்கள்தொகையில் 7.6 சதவீதமானோர் பேசுகின்றனர்.
இம்மொழி பேசப்படும் இடங்களாக ஸ்பெயின், மெக்ஸிக்கோ மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பெரும்பகுதி உட்பட 21 நாடுகளில் பேசப்படுகிறது.
3. ஆங்கில மொழி – (English Language)
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் மூன்றாவது ஆங்கிலமொழி காணப்படுகிறது. 1.5 பில்லியன் மக்கள், 35 நாடுகளில் இம்மொழியினை பேசுகின்றனர்.
இது முன்னணி சர்வதேச மொழியாகும். சர்வதேச வணிகம் மற்றும் வணிகத்திற்கான பொதுவான மொழியாகவும் காணப்படுகிறது.
4. இந்தி மொழி – (Hindi Language)
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் நான்காவதாக காணப்படுவது இந்தி மொழி ஆகும். இம்மொழியினை 490 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இந்தியாவின் வட பகுதிகள், நேபாளம் மற்றும் பிஜி போன்ற இடங்களில் அதிகம் பேசப்படுகிறது.
5. அரபு மொழி – (Arabic Language)
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் அராபிக் மொழி ஐந்தாவதாக காணப்படுகிறது. இம்மொழியினை 420 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
அரபிக் மொழி பேசப்படும் இடங்களாக கத்தார், எகிப்து, ஈராக், ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது.
6. பெங்காலி மொழி – (Bengali Language)
உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாவதாக பெங்காலி மொழி பேசப்படுகிறது. இம்மொழியினை 300 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
பெங்காலி மொழியினை பங்களாதேஷ், இந்தியாவில் சில மாநிலங்களில் பேசப்படுகிறது. இரண்டு நாடுகளிலே பெருவாரியாக பேசப்பட்டாலும் பொதுவான ஓர் மொழியாக காணப்படுகிறது.
7. போர்த்துக்கீஸ் மொழி – (Portuguese Language)
போர்த்துக்கீஸ் மொழி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஏழாவதாக காணப்படுகிறது. இம்மொழியினை 260 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
ஸ்பானீஷ் மொழி மற்றும் போர்த்துக்கீஸ் மொழி ஒத்தத் தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன. இம்மொழி பிரேசில், போர்த்துக்கல், மொசாம்பிக், மக்காவ், அங்கோலா, எக்குவடோரியல், கினியா, பிரான்சிப் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது.
8. ரஷ்யன் மொழி – (Russian Language)
எட்டாவதாக காணப்படும் ரஷ்யன் மொழியினை 264 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி ரஷ்யா, பெலாரஸ், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளிலும் பேசப்படுகிறது.
9. ஜப்பானிய மொழி – (Japanese Language)
ஜப்பானிய மொழியினை பேசுபவர்களின் எண்ணிக்கை மொத்தம் 128,350,830 ஆகும். ஜப்பானிய மொழி ஜப்பான் மற்றும் ஒகினாவாவில் அதிகம் பேசப்படுகிறது.
10. லாஹண்ட மொழி – (Lahnda Language)
உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளில் பத்தாவதாக பேசப்படுவது லாஹண்ட மொழி ஆகும். இம்மொழியினை 119 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
இது ‘லஹந்தி’ அல்லது ‘வெஸ்ரன் பஞ்சாப்’ என்றும் அழைக்கப்படுகிறது. லாஹண்ட மொழியினை பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள சில பிரதேசங்களில் பேசுகின்றனர்.