Breaking News

அட்லீ மீது கோபத்தில் ஷாருக்கான்!

 


'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். 

நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

ஜவான் பான் இந்தியா படமாக உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிகர் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விஜய் தற்போது லியோ பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதால் அவர் அப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. 

இதன் காரணமாக விஜய்க்கு நிகரான மாஸ் நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் அட்லீ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் அல்லு அர்ஜுனை நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அட்லீ - ஷாருக்கான் இந்நிலையில் ஜாவன் படத்திற்காக அட்லீ தான் படத்திற்கு நினைத்ததை விட அதிகமாக செலவு செய்ததால் ஷாருக்கான் அவர் மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கும் அட்லீ சென்னை வந்து தனது மன வேதனையை தெரிவித்ததாக சில செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

 மேலும் ஜவான் இந்த ஆண்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜவான் வெளியீடு தள்ளிப்போகும் எனவும் கூறப்படுகிறது.