Breaking News

மின்வெட்டுக்கு அனுமதி இல்லை - பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு!

 


உயர்தரப் பரீட்சை நடைபெறும் பிப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,709 மாணவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17 வரை மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு சட்டரீதியாக இலங்கை மின்சார சபையே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.