தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு !
யால தேசிய பூங்கா உட்பட தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகள் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும்.
வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், இந்த திட்டம் இந்த மாதம் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
டொலர்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, விடுத்த பணிப்புக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் யால தேசிய பூங்காவிற்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.