மீண்டும் நாட்டை வந்தடைந்த கோட்டா!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) இலங்கை வந்தடைந்தார்.
அதன்படி இன்று காலை ராஜபக்சவும் அவரது மனைவியும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததனர்.
கோட்டாபய ராஜபக்ஷ, மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையுடன், கடந்த டிசம்பர் 26ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
முன்னதாக, டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் கோட்டாபய எடுத்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.