சமையல் எரிவாயுவின் புதிய விலை விபரம் வெளியானது!
லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:
12.5 கிலோ சிலிண்டர் – 4,409 ரூபாய் (201 ரூபாய் குறைப்பு)
5 கிலோ சிலிண்டர் – 1,170 ரூபாய் (80 ரூபாய் குறைப்பு)
2.3 கிலோ சிலிண்டர் – 822 ரூபாய் (38 ரூபாய் குறைப்பு)