கல்வி அமைச்சின் விஷேட அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதரத்தில் சித்தியடைந்த மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான அனுமதி சுற்று நிருபங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் வசிக்கும் பகுதியில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவைக் கொண்ட பாடசாலையை பெற அந்தப் பகுதியின் வட்டாரக் கல்வி இயக்குநர் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.