சீனாவில் 90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு- ஆய்வில் தகவல்!
சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாகவும், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழப்பதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் அதை சீன அரசு மறுத்தது. இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 11-ந்தேதி 90 கோடியை கடந்து விட்டதாகவும் நாட்டில் 64 சதவீதம் பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அந்த நாட்டின் பீகிங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.