Breaking News

தளபதி 67-ல் நடிகராக இணைந்த சாண்டி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..




 நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

 தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 தளபதி 67 இதையடுத்து தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். 

மேலும், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு அறிவித்து வருகிறது. சாண்டி - தளபதி67 அதன்படி, தளபதி 67 படத்தில் சாண்டி மாஸ்டர் நடிகராக இணைந்துள்ளார். 

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் இப்படத்தில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.