நைஜீரியாவில் பயங்கரம்: குண்டுவெடிப்பில் 54 பேர் பலி!
நைஜீரியாவின் வட மத்திய பகுதியில் உள்ள நசராலாபெனு மாகாணங்களுக்கு இடையே குண்டு வெடித்தது. இதில் கால் நடை மேய்ப்பவர்கள், பொதுமக்கள் என 54 பேர் பலியானார்கள்.
இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்பது தெரியவில்லை. வடமத்திய நைஜீரியாவில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக நசராலா மாகாண கவர்னர் அப்துல்லாஹி கூறும் போது, "இந்த சம்பவத்தால் ஏற்படக்கூடிய பதட்டத்தை தணிப்பதை உறுதி செய்வதற்கு பாதுகாப்பு நிறுவனங்களை சந்தித்து வருகிறோம்" என்றார்.