Breaking News

இலங்கை மருத்துவ சங்கத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

 


வெளிநாடு செல்லும் மற்றும் ஓய்வு பெறும் வைத்தியர்களின் சரியான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.


சரியான தரவுகள் இல்லாமை பாரிய பிரச்சினையாக உள்ளதாக சங்கத்தின் புதிய தலைவராக பதவியேற்ற வைத்திய நிபுணர் வின்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் தேர்தல் நேற்று (14) நடைபெற்றது.

சங்கத்தின் 129வது தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி வின்யா ஆரியரத்ன தெரிவு செய்யப்பட்டார்.