Breaking News

கை சின்னத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி!

 


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் (17) செலுத்தியது.

நேற்று செவ்வாய்கிழமை மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு கட்டுப்பணத்தை செலுத்தியது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை உள்ளிட்ட 11 சபைகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடவுள்ள நிலையில் 11 சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆசன அமைப்பாளர் சதானந்தன் திருமுருகன் தெரிவித்தார்.