மலையக மக்களின் 200வருட வாழ்வியலை பிரதிபலித்து ஹட்டனில் ஊர்வலம்!
இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றதை நினைவு கூர்ந்து ஹட்டனில் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பித்து ஹட்டன் நகர் ஊடாக ஹட்டன் டி.கே.டப்ளியு, கலாசார மண்டபத்தினை சென்றடைந்திருந்தது.
குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட 1000 மேற்பட்டோர் மலையகத்தை அபிவிருத்தி செய்ய தயங்குவது ஏன்? மலையக மக்களை சிதைக்காதே? உறுதியளித்த பல்கலைக்கழகம் எங்கே? மலையக மக்களை சிதைக்காதே? போன்ற வாசகங்களையும் முன்னிலைபடுத்திருந்தனர்.
குறித்த ஊர்வலத்தில் தோட்டத்தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.