சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA தீர்மானம்
இந்த ஆண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன்.
“சுதந்திரம் கிடைத்த உடனேயே அது ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மைவாதமாக மாற்றப்பட்டது. அதனால் தான் இந்த நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பௌத்த மக்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்ததாக நினைத்தனர். எனினும், தங்களுக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று அவர்களும் கருதுகின்றனர். எனவேதான் பெப்ரவரி 4ஆம் திகதி 75வது சுதந்திர தினத்தை ஜனாதிபதி கொண்டாடும் போது இந்த நாட்டில் வாழும் எவருக்கும் அந்த சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். அதனால்தான் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாம் இதனை கருப்பு தினமாக அறிவித்து, நாட்டின் சுதந்திரத்தை முறையாகப் பெறுவதற்கான பிரச்சாரத்தைத் ஆரம்பிக்கவுள்ளோம்.