ஏகே 62: அஜித்துடன் இணையும் ஐஸ்வர்யா ராய்..?
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஏகே62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியான 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.