Breaking News

விமான பயணிகளுக்கு விசேட அறிவித்தல்!

விமான பயணத்தின் போது பூர்த்தி செய்ய வேண்டிய "வருகை தரல் மற்றும் வௌியேறுதல் அட்டையை" இணைய வழி ஊடாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk க்கு பிரவேசிப்பதன் மூலம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள் அட்டைகளை பூர்த்தி செய்ய முடியும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நபர் ஒருவர் புறப்படும் திகதிக்கு 03 நாட்களுக்கு முன்னரில் இருந்து அட்டையை நிரப்புவதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்து பயணிகள் இலகுவாக பணிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷ இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.