Breaking News

துணிவு படத்தின் மூன்றாவது பாடல் கேங்ஸ்டா வெளியானது!

 


எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கிக்கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

 இந்தப் படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் 'சில்லா சில்லா' மற்றும் 'காசேதான் கடவுளடா' பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் வைரலானது. இந்நிலையில், துணிவு படத்தின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா இன்று வெளியானது. இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்தப் பாடலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.