அமெரிக்காவில் சாலைகளில் மார்பளவுக்கு கொட்டிக்கிடக்கும் பனி- பலி எண்ணிக்கை 60ஆக உயர்வு !
அமெரிக்காவை பனிப்புயல் கடுமையாக தாக்கியது. அந்நாடு முழுவதும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் அந்த பனிப்புயலால் பல மாகாணங்களில் மக்கள் முடங்கி போய் கிடக்கிறார்கள்.
இடைவிடாது பனிப்பொழிவு உள்ளதால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி குவிந்து இருக்கிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து பனி கொட்டுவதால் மீட்பு பனிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மார்பளவுக்கு பனி கிடக்கிறது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
இந்த பனிப்புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது. சிலர் காருக்குள்ளேயே உறைந்து உயிரிழந்துள்ளனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.