காயமடைந்த காவல் துறை அதிகாரி.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு..
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காகத் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் ரசிகர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.
வாரிசு மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடக்கும் விழா என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அரசியல் தொடர்பான தனது நிலைப்பாட்டையும் மறைமுகமாக வெளிப்படுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது. வாரிசு இந்நிலையில், 'வாரிசு' இசை வெளியீட்டு விழா நுழைவு வாயிலில் ரசிகர்கள் கூட்டமாக நுழைய முயன்றபோது அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தடியடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ரசிகர்கள் காவல்துறையினரை கீழே தள்ளிவிட்டு உள்ளே நுழையும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிகில் இசை வெளியீட்டு விழாவில் என் பேனரை கிழியுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என விஜய் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.