Breaking News

10 மணித்தியால மின் வெட்டு ஏற்படும் அபாயம் !

 


டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முழுமையாக நிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால், நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

இதன் காரணமாக சுமார் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டினை மேற்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மின் பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.