Breaking News

ரசிகனை தாங்கிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்..

 



நடிகர் விஜய் சென்னையில் இன்று ரசிகர்களைச் சந்தித்துப் பேசினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். மக்கள் தேவைகளை வீடு தேடிச்சென்று விசாரித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூட்டத்தின் இறுதியில் அறிவுறுத்தப்பட்டது.  

நிர்வாகிகளை சந்தித்த விஜய் இந்த நிலையில் இன்று விஜய் மீண்டும் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்தித்தார். இந்த முறை அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். இதற்காகக் காலையிலிருந்தே பனையூர் விஜய் மக்கள் இயக்க தலைமையகத்தில் 300-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் இந்த நிகழ்வின் போது விஜய்யுடன் ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முன்வந்தார். அந்த ரசிகரை தனது கையில் தாங்கியபடி விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.