நாளை முதல் இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டு!
நாளை (13) முதல் இம்மாதம் 16ம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இதன்படி ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களுக்கு பிற்பகல் ஒரு மணித்தியாலமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கவுள்ளது.