வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை - நீதிமன்ற உத்தரவு!
அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மாத்திரம் அமுல்படுத்துவதை ஜனவரி 25 ஆம் திகதி வரை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
176 வைத்திய நிபுணர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.