வடக்கிற்கான புதையிரத சேவை 5 மாதங்களுக்கு தடை!
பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் இன்று (28) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மஹவயில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் புகையிரதத்தை நிறுத்த வேண்டும்.
புகையிரத பாதை திருத்தப்படாததால் மஹவயில் இருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.