Breaking News

கடவுள் அளித்த விலையுயர்ந்த பரிசு.. மகன்களின் பெயரை அறிவித்த நமீதா..

 


2004-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார். 

நமீதா விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார். மன அழுத்தத்தால் தான் தனது உடல் அவ்வாறு மாறியதாக, நமீதா குறிப்பிட்டு இருந்தார். 

வீரேந்திர சவுத்ரி - நமீதா பட வாய்ப்புகள் குறைந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைக்காட்டி வந்த நமீதா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அதிலிருந்து வெளியில் வந்ததும் தனது காதலர் வீரேந்திர சவுத்ரி என்பவரை 2017-ம் ஆண்டு மணந்து கொண்டார். 

திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த நமீதா கடந்த மே மாதம், தான் கர்ப்பமாக இருப்பதை வலைத்தளத்தில் அறிவித்து, கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார். மகன்களுடன் நமீதா அண்மையில் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

 இந்நிலையில், நடிகை நமீதா தன் இரட்டை குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர் வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கிருஷ்ணா ஆதித்யா' மற்றும் 'கியான் ராஜ்' இருவரும் என் கிருஷ்ணரால் பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள். 

எனது சொந்த ஊரான சூரத்தில் நெருக்கமான மற்றும் என் அன்புக்குரியவர்கள் மத்தியில் பெயர் சூட்டும் விழா நடந்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.