Breaking News

அதை உருவாக்கியவரை மறந்து விட்டேன்.. பிரதீப் ரங்கநாதனின் வைரல் பதிவு..

 


ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுது. மேலும், இப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. 

 இப்படத்தின் டைட்டில் 1997-ஆம் ஆண்டு இயக்குனர் பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'லவ் டுடே' படத்தின் டைட்டில் ஆகும். இந்நிலையில், 'லவ் டுடே' படத்தின் இயக்குனர் பாலசேகரனுக்கு நன்றி தெரிவிக்க மறந்து விட்டதாக பிரதீப் ரங்கநாதன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "லவ் டுடே என்ற தலைப்பை பயன்படுத்தும் போது அதை முதலில் உருவாக்கியவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன். 

அது லவ் டுடே பட இயக்குனர் பாலசேகரன், காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியுள்ளீர்கள் . தலைப்பிற்கு நன்றி சார் மற்றும் தாராளமாக இருந்ததற்கும்" என்று பதிவிட்டுள்ளார். லவ் டுடே இந்த பதிவிற்கு ரசிகர்கள் தயவு செய்து டைட்டிலில் இயக்குனருக்கு நன்றி தெரிவித்து விடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.