Breaking News

சிறுநீரக பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

 


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என நமது முன்னோர்கள் கூறிய நிலையில் நோய் வராமல் பார்த்துக் கொள்வது தான் நமக்கு மிகவும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது 

அந்த வகையில் பலருக்கு பெரும் தொல்லை தரும் சிறுநீரக பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதை பார்ப்போம் 

முதலாவதாக திரவ உணவை அதிகமாக உண்டால் சிறுநீர் பிரச்சனை வராது. தண்ணீர், இளநீர், பழ ஜூஸ் ஆகியவை அதிகமாக பருகுவதும் குறைந்தது ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் சிறுநீரக பிரச்சனை வராது 

அதுபோல் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்தால் சிறுநீரக பிரச்சனை என்ற கேள்விக்கே இடம் இல்லை. குறைந்தபட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் 

புகை மற்றும் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு சிறுநீரக பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த இரண்டையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் 

ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மட்டுமின்றி சிறுநீரக பிரச்சனை வராது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பழங்கள் காய்கறிகளை அதிகமாக சாப்பிடவேண்டும்

சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்வது சிசிறுநீரக பிரச்சனையை தடுப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும். உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வதால் சிறுநீரக நோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது

மேற்கண்ட முறைகளை மேற்கண்ட வழிகளை கடைப்பிடித்து சிறுநீரக பிரச்சனை வராமல் நமது உடலை பாதுகாப்போம்