குரங்கு அம்மை பரவல் எதிரொலி - சர்வதேச சுகாதார அவசரநிலை அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!
உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பதிவாகின. இந்நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்தலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த அவசரக் குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டப்பட்டது. கமிட்டியின் 15 உறுப்பினர்களில் 11 பேரும், 9 ஆலோசகர்களில் 6 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசுகையில், உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நாடுகளில் சரிவைச் சந்தித்து வருகிறது.