மாணவியின் கனவை நனவாக்க உதவிய ரோஜா.. குவியும் பாராட்டுக்கள்!
சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார்.
தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் தாய், தந்தை என இரண்டு பேரையும் இழந்து வறுமையில் வாடிய தனது தொகுதியை சேர்ந்த புஷ்பா என்ற மாணவியை தத்தெடுத்து கொண்டார்.
அந்த மாணவியின் கல்வி செலவை முழுவதும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார். மாணவி புஷ்பா தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, திருப்பதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர் கூறியதாவது, "மருத்துவ வசதி இல்லாமல் என் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பதே என் லட்சியம்" என்றார்.