புதிய தோற்றத்தில் ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய மெகாத்தொடர் இனியா. சன் டிவியில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி திங்கள் முதல் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. இனியா இந்த தொடரில் கதையின் நாயகியான இனியா சுட்டிப் பெண். அவளுக்கு ஒரு அப்பா அக்கா உண்டு.
அக்கா என்றால் உயிர். அக்காவுக்கு கல்யாணம் செய்து வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இனியாவின் ஒரே இலக்கு. அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முன்னால் போய் நிற்பாள். ஒரு நல்லது செய்ய சின்னச் சின்ன பொய் தப்பெல்லாம் கூட பண்ணலாம் அதுல தப்பில்ல என நினைப்பவள் இனியா.
ஆனால், கதையின் நாயகன் விக்ரம் போலீஸ் இன்ஸ்பெக்டர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர். சின்னச் சின்ன தவறையெல்லாம் கூட பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பவன்.
தப்பை சகித்துக் கொள்ள முடியாதவன். எதிரும் புதிருமாய் உள்ள நாயகனும் நாயகியும் இணைந்தால் என்ன நடக்கும், யார் யாரை வெல்லப் போகிறார்கள், என்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள மெகாத்தொடர் இனியா. இனியா இந்த தொடரில் இனியாவாக ஆலியா மானசா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளார். சன் டிவியில் தொகுப்பாளராய் பணிபுரிந்த ரிஷி, விக்ரமாக நடிக்கிறார்.
மேலும், சந்தான பாரதி, பிரவினா, எல்.ராஜா, மான்ஸி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இனியா தொடரில் சரிகம நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளராக இருக்கும் பி.ஆர். விஜயலட்சுமி, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சந்தான பாரதி, சங்கர் குரு பட இயக்குனர் எல். ராஜா, தொரட்டி பட இயக்குனர் மாரிமுத்து, இந்தத் தொடரை இயக்கும் நாராயணமூர்த்திய ஆகிய ஐந்து இயக்குனர்கள் இணைந்து பணியாற்றிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.