கன்னட மொழி படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து இவர், மிஷன் மஜ்னு, புஷ்பா -2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதனிடையே ராஷ்மிகா சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசியிருந்தார். அப்போது படத்தை தயாரித்த ரக்ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் தவிர்த்தார் என்று கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தனா இதனால் கோபமடைந்த கன்னட ரசிகர்கள் தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை மறந்துவிட்டு ராஷ்மிகா தற்போது தமிழ், இந்தியில் கவனம் செலுத்தி வருவதாக கூறி வருகின்றனர்.
மேலும், ராஷ்மிகா கன்னட திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த ரக்ஷித் ரெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில் ராஷ்மிகா சில காரணங்களால் திருமண முடிவில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.