மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு!
ஹட்டனில் இத்தினங்களில் மீண்டும் லிட்ரோ எரிவாயுவிற்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
லிட்ரோ நிறுவனம் ஹட்டனில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர்களுக்கு ஒரு மாத காலமாக குறைந்தளவிலான எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே வழங்கி வருவதால் இந்த எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் (26) லிட்ரோ நிறுவனத்தினால் விநியோகஸ்தர்களுக்கு எரிவாயு விநியோகிக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் நுகர்வோர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு விற்பனை நிலையங்களில் திரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.