Breaking News

வைரலாகும் கார்த்தியின் ஜப்பான் பட போஸ்டர்!

 


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான கார்த்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.

 தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சர்தார்' திரைப்படம் ரூ.100 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் படக்குழு இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி -2' திரைப்படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். 

இந்நிலையில், இவர் 'குக்கூ', 'ஜோக்கர்' போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். 

பூஜையுடன் தொடங்கிய ஜப்பான் 'ஜப்பான்' திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. 

ஜப்பான் பட போஸ்டர் இந்நிலையில் ஜப்பான் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கார்த்தி கையில் சரக்கு பாட்டிலுடன் சோபாவில் படுத்திருப்பது போன்றும் மறுபுறம் கையில் தங்கத்தால் ஆன உலக உருண்டை துப்பாகிகளை கார்த்தி வைத்திருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது.

 பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.