மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுப்பு!
மாவீரர் மாதத்தை முன்னிட்டு யாழ்.பல்கலை மாணவர்களால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இன்று(செவ்வாய்க்கிழமை) மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்.பல்கலையில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து நினைவுத்தூபிக்கு ஆத்மார்த்தரீதியாக மலரஞ்ஞலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.